Editorial / 2017 நவம்பர் 21 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழ்க்கையில் விரக்தியுடனும் துன்பங்களுடனும் வாழ்பவர்களை, ஏமாற்றிப் பிழைக்கப் பலர் நாடி வருவார்கள். அந்தச் சமயங்களில், நல்லோர் உறவுகளை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கவலையில், பிரச்சினைகளில் மூழ்கியிருப்பவர்கள், இலகுவில் கெட்டவர்களின் வார்த்தைகளுக்கு வசியமாகி விடுவார்கள்.
சொந்தங்களை மறக்கச் சொல்வார்கள். மதுவைத் தேடுவோம் வா நண்பனே என்பார்கள். என்னை மட்டுமே நம்பு; மற்றவர்கள் எல்லோரும் பொய்யர்கள் என்பார்கள்.
இத்தகைய பேர் வழிகள், தங்களை நம்பியவர்களைப் பொறுத்தநேரத்தில் கைகழுவி விட்டுவிட்டு மறைந்து விடுவார்கள்.
துன்பங்கள் சூழ்ந்த வேளையில்தான் மனிதன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனம் தளராது எழுந்து, தன்னை நிலைநிறுத்த வேண்டும். மலையையும் எலி துளைத்து, தனக்குரிய அரண் அமைக்கும்.
அறிவும் ஆற்றலும் உள்ள மனிதன், தனது திறனை அடையாளம் காணாது வாழ்வதே வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். நல்லவற்றை மட்டும் தேடி அடைவதே வாழ்க்கை.
வாழ்வியல் தரிசனம் 21/11/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025