Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடையில் பொருளொன்றை வாங்கியவர், காசைக் கொடுத்துவிட்டு சற்று யோசித்த பின்னர், வேறொரு பொருளைக் கேட்டு வாங்கிக்கொண்டு, மறதியாகச் செல்ல நிலைத்த போது, கடைக்காரர், “ஐயா! காசு தரவில்லை” என்றார். “என்ன, காசு தரவில்லையா? நான் ஐந்நூறு ரூபாய் தந்துவிட்டேனே!” என்று பரபரப்புடன் கூறினார்.
“அப்படியா?” என்றவர், சற்று நேரத்தில், “சரி... சரி...” என்றவர், சற்சேனும் கூச்சப்படாமல், “உங்கள் காசை எடுத்துக்கொண்டு ஓடவா போகிறேன்” என்று, வெறுப்பு உமிழ, வேண்டா வெறுப்புடன், எஞ்சிய காசைக் கொடுத்தார்.
இத்தகையச் செயல்களை, பஸ் நடத்துநர்களிடமும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். முதலில், பயணிகளிடம் கெஞ்சிக் கூட்டாடி, அவர்களை பஸ்களில் ஏற்றிக்கொண்ட பின்னர், காசைப் பிடிங்கிக் கொள்வார்கள். மிகுதியைக் கேட்டால், சீறிப் பாய்வார்கள். பஸ் தரிப்பிடம் வரும்வரை, நடத்துநர் ஓடி ஒளிந்துகொண்டு வித்தை காட்டுவார். முடிவில், பயணியின் நிர்பந்தத்தில் பஸ் நிறுத்தப்பட்டதும், சில்லரைகளை அள்ளி வீசுவார்.
ஆனால், கொடுத்த காசில் பல ரூபாய்களை விழுங்கிவிட்டிருப்பார். அநேகமான தனியார் பஸ்களில், இவையெல்லாம் சகஜமான காரியங்களாகும். அவர்கள், பயணிகளுடன் கௌரவமாகப் பேசவும் மாட்டார்கள்.
மாந்தரை மதிக்கக் கற்றுக்கொள்வதே பெருமை.
வாழ்வியல் தரிசனம் 09/05/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago