2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

‘மூளை வலு இல்லாமல், பணத்துக்குப் பலம் சேராது’

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்கத்துடன் செயலாற்றும் செயல் வீரர்கள், பிறர் சொல்லும் தளர்வூட்டும் பேச்சுகளைச் செவி மடுக்கவே மாட்டார்கள். 

இந்தச் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு, உன்னால் என்ன சாதிக்க முடியும்? எனச் சொல்லி, ஒருவரைப் பலமிழக்க முயல்பவர்கள் பலருண்டு.  

காசைவிடக் செய் காரியங்கள் பெரிதாக அமைய வேண்டும். மூளை வலு இல்லாமல், பணத்துக்குப் பலம் சேராது. படிப்படியாக இருப்பதை வைத்துப் பொருள் தேடுதல் புத்திசாலித்தனம்.  

இன்று பெரும்பாலான செல்வங்களில் பலர் பரம்பரைப் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதேபோல், முன்னர் டாம்பீகமாக வாழ்ந்தவர்கள் எல்லோருமே இன்றுவரை அதே நிலையில் இருப்பதுமில்லை.  

உழைப்பவர்களை உயர்த்த அரசுகள் உதவவேண்டும். அரசுகள் சயனித்துக்கொண்டிருந்தால், அரசாங்கத்தின் பயணம் அநாகரிகமாகி விடுகிறது. உழைப்பவனை அழவைக்கக் கூடாது. 

     வாழ்வியல் தரிசனம் 25/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X