2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வேரறுக்காது விட்டால்…

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஞ்சத்தில் வஞ்சனைகள், கோபம், குரோதங்களை வேரறுக்காது விட்டால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உறக்க நிலைக்குச் சென்றுவிடும்.

மனம் தன்வழியில் இயங்கிட அனுமதிக்கலாகாது. தீயவர்கள் கெட்ட மனதைத் தட்டிக் கொடுத்து அதனை விஷ்வரூபமாக்கி விடுகின்றனர்.

இதனை அடக்கி ஒடுக்குவதற்கு நல்லறிவு அவசியமானது. மனம் திரிபுபட்டால், அறிவு, புலன்களுக்குப் புரிவதில்லை.

நல்ல நுணுக்கமான சமூகப்பார்வை, சிறந்தவை மட்டும் கேட்பது, பார்க்கக் கூடாதவைகளை விழித்து, விரித்துப் பார்க்காமல் நல்வழியை மட்டும் நோக்குதல், நற்சிந்தனை கேட்பது, உடலுக்கு ஊறு செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதும்தான் இந்த ஆன்மாவைத் தூய்மையுறச் செய்யும்.

எல்லோரினாலும் செய்யக்கூடிய இவைகளை மறுக்க எண்ணுதல் மகா பாவம். உலக விழிப்பு மலர தனி மனித ஒழுக்கம் அவசியம்.  

 

வாழ்வியல் தரிசனம் 29/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X