Princiya Dixci / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ச்சியாக நாம் செய்யும் நற்காரியங்களால் ஒழுக்கம் எம்முடன் பிணைந்து கொள்கின்றது. ஓரிரு விடயங்களில் மட்டும் நாம் சில நல்ல செயல்களைச் செய்தால் போதுமா?
மனதைக் கட்டுப்படுத்த நிலையான வாழ்வை மகிழ்ச்சியுடன் கைப்பற்ற ஒழுக்கமே பிரதானமாகும். எமக்கு ஒரு வாழ்க்கையை கடவுள் கொடுத்ததுவே மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கேயாகும். அப்படியானால் சீரான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதில் ஏது ஐயா சிரமம் இருக்கின்றது?
வேருக்கு நீர் தேவை! அவ்வண்ணமே சிறப்புற வாழ்வதற்கு நற்பண்பு அவசியமானது. நற்குணங்களே ஒழுக்கமாகின்றது. இது வலிமையுடன் இருந்தால், வாழ்க்கையில் நாம் வழுக்கி விழ மாட்டோம்.
வாழ்வியல் தரிசனம் 15/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .