2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வன்முறையின் ஒரு வடிவம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீதனம் வாங்கும் முறைமையினால் கடன்கார மாமனார்கள்தான் கூடி விட்டார்கள். ஏற்கெனவே இந்த மாமனார்கள் முன்னாள் மாப்பிளையாக இருந்து, சீதனத்தை தங்களது மாமன்மார்களிடம் கறந்தவர்கள். 

இந்தப் பாவம் அவர்களைச் சும்மா விடுமா? வாங்கிய தொகைகளைப் பிள்ளைகளின் கல்விக்கும் ஏனைய செலவுகளுக்கும் பயன்படுத்திய பின்னர், ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

பெண்களைப் பெற்றோரே இவ்விதமான பிரச்சினைகளுக்கு உட்ளாகின்றனர். ஆண்பிள்ளைகள் பெற்றவர்களுக்கு அவ்வளவாகப் பிரச்சினைகள் எழுவதில்லை. ஆண்பிள்ளைகளை விற்கும் குடும்பமே ஏராளம். 

சில பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகள் மூலம், சீதனம் சேகரிப்பார்கள். ஆனால் தங்களுடைய மகளுக்கு சீதனம் வழங்க மட்டும் நீதி, நியாயம் கேட்பார்கள்.

எவரும் எவரது உழைப்பையும் இலவசமாகக் கோருதல் கொடுமை. இது கூட வன்முறையின் ஒரு வடிவம்தான். 

 

வாழ்வியல் தரிசனம் 11/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X