Editorial / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உண்மைகளை, நியாயம் நீதிகளைப் புரிந்து கொண்டவர்கள், அதை மக்கள் நலன் பொருட்டு, ஒன்றையுமே வெளிப்படுத்தாது, மௌனம் காப்பவர்கள் பொய்யர்கள் ஆகின்றார்கள்.
நல்லதைத் தெரிந்து வைத்து, அதைத் தனக்குள்ளே முடக்கி வைத்தால், யாது பயன் ஐயா? எமக்கு எதற்கு வீண் வம்பு என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தப்பித்து விடமுடியாது.
குற்றமிழைத்தவன் எனத் தெரிந்தும் அவன் பொருட்டு, எந்த நீதிபதிகளும் நீதியில் இருந்து பிறழமுடியாது. சமூக நீதிக்களத்தில் உறுப்பினர்கள் சாதாரண மக்கள்தான். எனவே, தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரித்து உடையவர்களும் மக்களேயாவர்.
உண்மைகளை வெளிப்படுத்த விரும்புபவர்களுக்கு உறுதுணையாக நிற்க, மக்கள் அச்சப்படுகின்றார்கள்.எல்லோருக்கும் சட்டப் பாதுகாப்பு இருக்கின்றதா?
இஷ்டப்படி நடப்பது துஷ்டர்களின் செயலாகி விட்டது. துஷ்டரை அடக்கி ஒடுக்க, எல்லோரும் சேர்ந்தியங்க வேண்டும். வலிந்து மோதுபவரை இழுத்து வீழ்த்துக.
வாழ்வியல் தரிசனம் 25/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
11 minute ago
23 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
38 minute ago