2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வல்லமை எப்படிக் கிட்டுகின்றது?

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 10:15 - 1     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் அன்றாடம் விழித்து எழுகின்றீர்கள். பின்னர் படுக்கைக்குப் போகும் முன்னர், பல காரியங்களைச் செய்கின்றீர்கள். 

நடக்கின்றீர்கள், ஓடுகின்றீர்கள், படிக்கின்றீர்கள்; உங்கள் அன்றாடக் கருமங்களை ஓயாமல் செய்து வருகின்றீர்கள். அப்படியாயின் இத்தனை காரியங்களையும் எப்படி உங்களால் செய்யக்கூடியதாக உள்ளது? இந்த வல்லமை எப்படிக் கிட்டுகின்றது. 

உணவும் நீரும் காற்றும் எமக்குச் சக்தியை ஊட்டுகின்றன. ஆயினும் எம்மை அதனூடாக இயக்கும் வல்லமை, எவரால் ஊட்டப்படுகின்றது என்று அனுதினம் சிந்திப்பதுண்டா?  

இந்தத் தேகத்தை அடங்க விடாமல் இயங்கச் செய்யும் ஆண்டவன் கிருபை மகத்தானது அல்லவா? பல நோய்களில் இருந்து எப்படி மீண்டு வருகின்றீர்கள் என நினைப்பதும் உண்டா?  

தெய்வ நம்பிக்கை விரிவானால், வல்லமை சக்தி உயர்ந்தோங்கும். உண்மை!  

வாழ்வியல் தரிசனம் 04/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 1

  • bala Saturday, 08 July 2017 11:13 AM

    good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .