Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் ஒருவருடன் கோபிப்பதால், திருப்திப்படுகின்றீர்கள். எப்படியாவது உங்களது கோபத்தின் தாகம் தணிக்கப்பட்டு விட்டதாகக் கருதியும் கொள்ளலாம்.
ஆனால், உங்களால் ஏற்பட்ட ஆத்திரம் கேட்பவர்களை எங்ஙனம் பாதிக்கின்றது என உணர்ந்ததுண்டா?
நியாயபூர்வமான கோபம் வருதல் மானிட சுபாவம்தான். ஆனால் எல்லை மீறிய மனத்தாக்கங்களை வார்த்தைகளால் அல்லது வேறுவிதமான செய்கைகளினால் பழிவாங்குவதால் வருவது ஒரு, சுயதிருப்தி என எண்ணுதலும் அது தவறே அல்ல; நினைப்பது சரிதானா எனச் சற்றே சிந்திப்பீர்களாக.
அடிக்கடி பிறருடன் கோபித்துக் கண்டபடி வார்த்தைகளை அவிழ்த்துவிடுவதும் பின்னர், அவர்களிடமே மன்னிப்புக் கேட்டு, அதன்பின்னர் மனம் சாந்தியடையலாம். ஆனால், நீங்கள் தொடுத்த வார்த்தைப் பாணங்களின் வலிக்கு என்ன விலை?
“கோபம் தொடுத்தலால், தொடுத்தவரே பாதிக்கப்படுவார்”
வாழ்வியல் தரிசனம் 22/09/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago