2024 மே 03, வெள்ளிக்கிழமை

‘வாழ்க்கை என்பது புரியாத சூத்திரம் அல்ல’

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலமுள்ளவன்தான் பேசவேண்டும்; சமானியனுக்குப் பேச உரிமையில்லை. சொல்வதைக் கேட்கும் ஜடம்தான், பொதுமகன் கடமை என எண்ணும் மேலாதிக்க உணர்வு இன்னமும் அஸ்தமிக்கவில்லை. 

ஏதோ ஒரு பயமுறுத்தல் மூலம் நியாய தர்மங்களைப் பேசினால் பயமுறுத்தப்படுவோம் என்ற பயம் இன்றும் நிலவுகின்றது.  

‘கேட்டு நட; அல்லது வாயை மூடிக்கொண்டு போ’ எனப் பகிரங்கமாகச் சொன்னால், சந்தேகத்துக்குரிய விடயங்களைத் தீர்ப்பது எப்படி?  

கடவுளுக்குக் கூடப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும் என எண்ணும் தலைவர்கள் இன்னமும் தண்டனை கிடைக்காமையால், கண்டபடி பேசித் திருப்திப்பட்டுக் கொள்வதுண்டு.  

மக்களை நேசிக்காது விட்டால், வார்த்தைகளும் மூர்க்கத்தனமாகி விடும். வாழ்க்கை என்பது புரியாத சூத்திரம் அல்ல; அன்பினால் இணைந்துள்ள இதயங்களின் மொழி, இனியஇசையை மீட்கும். இதை உணர்ந்தால் பௌவியம், பணிவு தானாய் வரும்.   

     வாழ்வியல் தரிசனம் 17/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .