2024 மே 17, வெள்ளிக்கிழமை

‘வாழ்க்கை பற்பல விதம்தான்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதையும் தெரிந்து கொள்ளாமலும் தெரிவதற்கு பிரியப்படாமலும் எதற்கும் ஆசைப்பட்டு ஓடாமலும் இருப்பவர்கள் திருப்தியுடன் வாழ்பவர்கள் எனச் சொல்லப்படுகின்றனர். ஆசைக்குள் அடைபடாமல் வா​ழ்வது எப்படி? 

 ஆனால் இவ்வண்ணம் வாழ்வதோ மெத்தக் கடினம். உலகம் பற்றிய பி​ரக்ஞை இன்றி இயங்குவது எப்படி? இருப்பதைக் கொண்டு, களிப்புடன் அதனை ஏற்பது கூட ஒரு துறவு மனப்பான்மையை ஒத்ததுதான். ஆசைகளை அறுத்தல் துறவு. 

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும்போது, ஐயங்களும் ​தொடர்ந்து வரும். அறிவுத் தேடல்கள் நீண்ட பயணம். அதில் எப்படிப் பூரண பயன்பெற முடியும். 

மேலும், தங்களுக்குப் பக்கத்தில், இருப்பவர்களைப் பற்றி, துருவித்துருவி ஆராய்பவர்களும் எங்கோ நடக்கும் உலக அதிசயங்களை, மாற்றங்களை அறியாமல் வாழ்பவர்கள் விசித்திரப்பிரவிகள் தான். 

ஆனால், இதுவே சிலருக்குப் பிடித்தும் போய்விடுகின்றது. சிலரின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கேயானது. 

 எதுஎப்படியிருப்பினும் துன்பத்திலிருந்து விலகாமலும் இன்பத்துக்குள் நுளையாமலும் வாழ்வது கடினம். வாழ்க்கை பற்பல விதம்தான்.  

   வாழ்வியல் தரிசனம் 17/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .