2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘வாழ்வின் தாற்பரியத்தை, உணர்க’

Editorial   / 2018 மார்ச் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னஞ்சிறு குடிலில் பிறந்து, வெற்றுடம்புடன் சேற்றுக்குள் தவழ்ந்து, துழாவி, வெய்யிலில் காய்ந்து, ஈற்றில் மாமேதைகளாக உருவான பலர் இருக்கின்றார்கள். கடவுளின் பார்வை எல்லோரின் மீதும் பட்டே தீரும்.  

ஆனால், குப்பை மேட்டருகே வாழ்ந்த, பாமரன் உயர்நிலை அடைவதைச் சிலரால் ஜீரணிக்க முடிவதில்லை. “பார்த்தீர்களா, இந்தப் பரதேசி மகனை...” எனக் குமுறுகின்ற பேர்வழிகள், தங்களின் குடும்பத்தைத் தவிர, வேறு ஒருவரையும் மனித உருவாகக் கருதுவதே இல்லை. 

இத்தகையவர்கள், உண்மை நிலையுணர்ந்து, எவரோ ஓர் ஏதிலிக்குத் தர்மம் செய்து, அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வியூட்டும், கைங்கரியம் செய்தால், அவர்தம் பரம்பரைகள், உயர்ந்து நிலைபெறும் என்பதை உணரவேண்டும்.  

வாழ்வின் தாற்பரியத்தை, உணர்ந்தால்தான், தானதர்ம சிந்தனைகள் தானாக உருவாகும். கல்விக்கான கொடையை குறையறச் செய்து உய்மின். 

வாழ்வியல் தரிசனம் 15/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X