2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வாழ்வில் மமதை, அகம்பாவம் எதற்கு?

Editorial   / 2017 ஜூலை 06 , மு.ப. 11:18 - 1     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் பிடிவாதமாக உறவுகளை வெறுத்து, தனித்து வாழுபவர்கள் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியாது. ஒதுங்கியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

முதியவர் ஒருவர் வழியில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். முதுமை காரணமான கால்தடக்கி, வீதியில் வீழுந்து, மயங்கி விட்டார். அப்போது அந்த வழியால் சென்ற இளைஞன், அவரைத் தூக்கி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.  

அவருக்கு நினைவு திரும்பியதும் தன்னை மருத்துவமனையில் அனுமதித்தவர் யார் என வினவினார்? அப்போது அவன் தனது சொந்தப் பேரன் என அறிகின்றார்.  

இது நாள்வரை, வெளிநாடு சென்று திரும்பி​வந்தும் கூட, உறவுகளையே தேடாத அந்த முதியவர், இப்போது தன்னை அறியாமல் கண்கலங்கி நின்றார். 

உறவுகளை உதறியதால் என்ன பலன்உண்டு? இருக்கும் வாழ்வில் மமதை, அகம்பாவம் எதற்கு? வாழ்வு மிக நீண்டதல்ல. 

   வாழ்வியல் தரிசனம் 06/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 1

  • bala Saturday, 08 July 2017 11:09 AM

    good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .