2024 மே 20, திங்கட்கிழமை

விசாலங்களை அறிய முடியுமோ?

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘ஜகத்’ என்றால் மாறும் தன்மையுடையது. இந்த உலகம் மாறும் தன்மை​ கொண்டது என்பதால், ‘ஜகம்’ என்று அழைக்கின்றோம்.  

பூமி, சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது. இரவு, பகல், காலமாற்றங்கள், உயிர்களின் பிறப்பு, இறப்பு, இயற்கைப் பேரழிவுகள், கண்டங்கள் இடம்பெயர்தல் என எல்லாமே இங்கே நிகழ்ந்த வண்ணமாய் உள்ளன. மனிதர்களுக்கு எந்தப் பலமும் இல்லை. 

இங்கு எதுவுமே நிலையாக இல்லை. ஆனால், இதனை உருவாக்கியவர், நிலையாக நின்று, சகலதையும் செய்வித்த வண்ணமாயிருக்கின்றமை, எம் அறிவுக்கு எட்டாத ஒன்றுதான். எப்படி இவை எல்லாம் நடந்தேறுகின்றன. இதை உணரச் சித்தத்துக்குச் சக்தி இல்லை.  

இந்த ஒரு பூமிக்குள் இத்தனையும் நிகழும்போது, பலகோடி சூரியர்கள், கிரகங்கள், அண்டங்கள், பேரண்டங்களின் பேருண்மை, அதன் விசாலங்களை அறிய முடியுமோ? 

     வாழ்வியல் தரிசனம் 20/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X