2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

‘வெறுப்பை அறு’

Editorial   / 2018 ஜூலை 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவரிடையே சண்டை சச்சரவு ஏற்பட்டால், காலப்போக்கில் அவர்கள் சமரசமாகி விடுவது இயல்பு. 

ஆனால், நண்பர்களிடையே சாதாரணமாகக் கருத்து முரண்பாடு ஏற்பட்டால், சில வேண்டாத பேர்வழிகள் இடையே புகுந்து, சமரசம் என்னும் பெயரில் உள்நுழைந்து, அவர்களிடையே தீராத மனஸ்தாபங்களைத் தீயாக வளர்த்தும் விடுகின்றார்கள். 

நண்பர்கள் மட்டுமல்ல, எவரிடத்திலும் தப்பான அபிப்பிராயம் வந்தால், அவர்கள் மனோநிலையைப் புரிந்து, தகுந்த நேரத்தில் பேசித் தீர்ப்பதே, சுலபமான வழியாகும். 

இடைத்தரகர்களில் சிலர், பிறர் நலனை உடைப்பதில் வல்லவர்கள்.மனம் கருகிய மாந்தர்களும் அதே சமயம், நல்லவர்களும் எங்களுடன் சேர்ந்தே இருக்கிறார்கள்.இவர்களுள் எவர், எவர் எமக்கு உகந்தவர் என்பதை, நீங்களே தெரிவு செய்யுங்கள். 

பகைவர்களுடன் எதிர்ப்பதைவிட, வஞ்சகர்களுடன் முரண்படுதல் ஆபத்தானது.

ஆனால், பகைவரும் வேண்டாம், எனக் கருதும் எல்லோரையும் சக மனிதர் என எண்ணுதல் பொருத்தமானது. வெறுப்பை அறு. 

வாழ்வியல் தரிசனம் 02/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X