Editorial / 2017 ஜூன் 06 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடுச்சந்தியில் நாய்கள் உக்கிரமான சண்டையில் ஈடுபட்டிருந்தன. ஒரு பெண் நாயைச் சுற்றி, காதலியை அடையும் சண்டையிது. உடனே அங்கு புகுந்த ஒரு பெரிய நாய், பலத்துக் குரைத்ததுடன் மற்றைய நாய்களை மிரட்டி, விரட்டிவிட்டது.
போரிட்டு, காயப்பட்டும் களைத்தும்விட்ட ஆண்நாய், பெண்நாயை அழைத்துக்கொண்டு, ஒரு திருமண வீட்டுக்குச் சென்றது. மிச்ச உணவை வீசி எறிந்த இடத்துக்குச் சென்று, பெண்நாய்க்குச் சாப்பிட வழிவிட்டு நின்றது. பெண்நாயும் ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்தது.
ஆண் நாயோ பெருமிதத்துடன், அதன் அருகே நெருங்கியதுதான் தாமதம், தன்னுடைய உணவை அது சாப்பிட வருவதாக எண்ணி, ஆண்நாய் மீது ஆக்ரோசமாகப் பாய்ந்து குரைத்தது.
களைப்படைந்திருந்த ஆண்நாயோ, சற்றுப் பின்னால் சென்று, ‘அடி நன்றிகெட்ட நாயே! இப்படிச் செய்து விட்டாய். எனக்கு என்ன வேறு பெண் கிடைக்காதா என்ன’ எனச் சிந்தித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றது. தூரத்திலிருந்த பல நாய்கள் மீண்டும் பெண்நாயை நோக்கி வந்துகொண்டிருந்தன.
மனிதர்களிலும் பலர் நன்றிமறந்து நடப்பதுண்டு. சிலர் நன்றிமறப்பதே பிழைப்பதற்கு ஒரு வழி என்று கருதுகின்றனர். துரோகம் கேவலமானது.
வாழ்வியல் தரிசனம் 06/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
13 minute ago
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
40 minute ago