Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க நடிகையும் பாடகியுமான லின்ட்ஸே லோஹனுக்கு 120 நாட்கள் சிறைத்தண்டனை விதத்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
24 வயதான லின்ட்ஸே, மதுபோதையுடன் வாகனம் செலுத்தியதாக 2007 ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கில், லின்ட்ஸே நன்னடத்தைக் கண்காணிப்பில் இருந்துவந்தார்.
இந்நிலையில் நகைக் கடையொன்றில் நகையொன்றை திருடியதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றமொன்றில் இது தொடர்பாக வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்த திருட்டுச் சம்பவம் அவர் மீதான நன்னடத்தை உத்தரவுக்கு முரணானதாகும் என நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்த நீதிபதி, லின்ட்ஸேவுக்கு 120 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தார். அத்துடன் 480 மணித்தியாலங்கள் சமூக சேவை செய்யவேண்டுமென்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago