2024 ஜூன் 17, திங்கட்கிழமை

இந்திய செல்வந்தர் ஒருவர் 5 மில்லியன் பௌண்ட்ஸ்களை வழங்க முன்வந்தார்: போல் நிக்சன்

A.P.Mathan   / 2012 ஜூலை 02 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் உள்ளூர்ப் போட்டியொன்றில் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட இந்தியாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தனக்கு 5 மில்லியன் ஸ்ரேர்லிங் பௌண்ட்ஸ்களை வழங்க முன்வந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், லெசெஸ்ரெர்செயார் அணியின் முன்னாள் வீரரருமான போல் நிக்சன் தெரிவித்துள்ளார்.

லெசெஸ்ரெர்செயார் அணி விளையாடிய டுவென்டி டுவென்டி போட்டியொன்றின் முடிவினை மாற்றித் தருவதற்காகவே அவர் இப்பணத்தொகையை வழங்க முன்வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகவல்களை அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில "கே" எழுத்துக்களால் அவரை அடையாளப்படுத்தும் நிக்சன், 2010ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார். அவர் குறித்த பேரம் பேசலில் ஈடுபட முன்னர் தனக்குப் பெறுமதியான பரிசொன்றை வழங்கியதாகவும், அதைத் தான் பெற்றுக் கொண்டதாகவும், எனினும் அவர் போட்டி நிர்ணயம் பற்றிச் பேச முற்பட்ட பின்னரே அவரைப் பற்றி உணர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக அவர் தன்னைப் பின்பற்றி வந்ததாகவும், எப்போதும் நட்புறவுடன் பழக முற்பட்ட அவர், தொடர்ந்தும் தன்னோடு நல்ல நட்புறவைப் பேண விரும்புவராகக் காட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

அவர் தன்னை ஒருமுறை ஹொட்டலுக்கு அழைத்துத் தன் திட்டங்களைத் தெரிவித்ததாகத் தெரிவித்த அவர், தான் அங்கிருந்து வெளியேற விரும்பிய போதிலும், அவரது பின்புலங்களை அறிய விரும்பியதன் காரணமாக அவர் கூறியவற்றை முழுமையாகக் கேட்டதாகவும் தெரிவித்தார். அத்தோடு அந்தச் சம்பவம் தொடர்பாக அணி முகாமையாளரிடம் தான் முறையிட்டதாகவும் நிக்சன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X