2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நிர்வாணப் புகைப்படம் வெளியிட்ட சஞ்சிகையிடம் 10 கோடி ரூபா நஷ்டஈடு கோருகிறார் வீனா மாலிக்

Super User   / 2011 டிசெம்பர் 08 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் நடிகையான வீனா மாலிக், தன்னை நிர்வாணமாகத் தோன்றச்செய்யும் வகையில் தனது புகைப்படங்களை மாற்றி வெளியிட்டமைக்காக தனக்கு 10 கோடி இந்திய ரூபா (சுமார் 22 கோடி இலங்கை ரூபா) நஷ்ட ஈடு வழங்குமாறு கோரி, எவ்.எச்.எம். இண்டியா சஞ்சிகைக்கு எதிராக  சட்டத்தரணி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றில் விரைவில் வழக்குத் தொடரப்படும் என வீனா மலிக்கின் சட்டத்தரணியான அயாஸ் பிலவாலா கூறியுள்ளார்.

இப்புகைப்படங்களில் வீனா மாலிக் ஆடையுடனே போஸ் கொடுத்தார். ஆனால், அப்புகைப்படங்கள் வீனா மாலிக் நிர்வாணமாக தோன்றுவதுபோல் மாற்றப்பட்டு, சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

வீனா மாலிக்கின் கையில் ஐ.எஸ்.ஐ. என்ற எழுத்துக்களை பொறிக்கும் யோசனையையும் சஞ்சிகையின் ஆசிரியரே தெரிவித்தார். இதனால் பிரச்சினை எதுவும் ஏற்படாது என வீனாவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என பிலவாலா கூறினார்.

வீனா மலிக்கின் அறிவித்தல் தனக்கு கிடைத்துள்ளதாக எவ்.எச்.எம். இண்டியா ஆசிரியர் சர்மா கூறியுள்ளார். எதிர்வழக்குத் தொடுப்பது உட்பட இதற்கு பதிலளிப்பதற்கான வழிகள் குறித்து நாம் ஆராய்கிறோம் என சர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி:

நடிகை வீனா மலிக்கின் நிர்வாண புகைப்படத்தால் இந்தியா, பாகிஸ்தானில் சர்ச்சை


  Comments - 0

  • arr Wednesday, 21 December 2011 11:58 AM

    தொலைஞ்சி வீட்டு வேளைகளை ஒழுக்கமாக செய். அழகை காட்ட போய் அழிந்து போகாம.

    Reply : 0       0

    Ziyard Saturday, 24 December 2011 01:32 AM

    உன் அழகு மற்றவனுக்கு என்ன தங்கமா? உனக்கு உள்ள கொழுப்பு உனது காமம் தேவையா? முன்னால் காட்டிவிட்டு பின்னால் தவிக்கிறாய்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .