2024 மே 14, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் 108 பேருக்கு பத்ம விருதுகள்; ஜானகி வாங்க மறுப்பு; கமல் பெயர் நீக்கம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 26 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த 108 பேருக்கு இம்முறை இந்த பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், தொழிற்துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இந்திய அரசுப் பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் யஷ்பால் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், உள்ளிட்ட 24 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி, நானா படேகர், திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி உள்ளிட்ட 80 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்படும்.

பாடகி ஜானகி வாங்க மறுப்பு


மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகள் பெரும்பாலும் வட இந்திய கலைஞர்களுக்கே அதிகம் வழங்கப்பட்டதைக் கண்டித்து தனக்கு வழங்கப்படும் பத்மபூஷன் விருதை வாங்கப் போவதில்லை என்று பிரபல பாடகி எஸ்.ஜானகி அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எஸ். ஜானகி, 'பத்ம விருதுகளுக்குப் பெரும்பாலும் வட இந்தியக் கலைஞர்களே பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.

இதனால் எனக்குக் கொடுக்கப்பட பத்மபூஷன் விருதை வாங்க மாட்டேன் என்றார் அவர். பாடகி எஸ். ஜானகியின் இந்த அறிவிப்பு திரைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் பெயர் நீக்கம்


இதேவேளை, பத்பூஷன் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட உலக நாயகன் கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், 'விஸ்வரூபம்' சர்ச்சைதான் இதற்கு காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் சிந்திக்க வைத்ததாகவும் இதனாலேயே பெயர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Saturday, 26 January 2013 03:04 PM

    கமலது விஷ்வரூபம் அவருக்கு எதிராகவே விஷ்வரூபம் எடுத்துள்ளது. எனினும் பத்மபூஷன் விருதுக்கு தகுதியான சிறந்த கலைஞர் கமல்...

    Reply : 0       0

    mohamed Saturday, 26 January 2013 05:17 PM

    நல்ல முடிவு ஆனால் விடிவு கிடைக்குமா

    Reply : 0       0

    Raheem Sunday, 27 January 2013 05:31 AM

    சரியான முடிவு.

    Reply : 0       0

    kannan Wednesday, 30 January 2013 02:17 AM

    நாய்கள் குரைத்து சூரியன் மறையாது,

    Reply : 0       0

    mursith Wednesday, 30 January 2013 06:52 PM

    எறும்பூரக் கட்குளியும்

    Reply : 0       0

    ZIYA Sunday, 03 February 2013 09:07 AM

    யார் நாய், யார் மனிதன், கருத்துச்சொல்வதற்கு உரிமை கொடுங்கள்.

    Reply : 0       0

    abu nana Thursday, 07 February 2013 04:44 AM

    கமலது சுயரூபம் அவருக்கு எதிராகவே விஷ்வரூபம் எடுத்துள்ளது. பத்மபூஷன் விருதுக்கு தகுதியான சிறந்த கலைஞர் கமல் அல்ல......

    Reply : 0       0

    azhar Thursday, 07 February 2013 04:52 AM

    கமலது சுயரூபம் அவருக்கு எதிராகவே விஷ்வரூபம் எடுத்துள்ளது.

    Reply : 0       0

    Mathana Saturday, 09 March 2013 05:09 AM

    பத்மபூஷன் விருதுக்கு தகுதியான சிறந்த கலைஞர் கமல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .