Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 05 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ட்விற்றர் சமூக இணையத்தளத்தில் 20 மில்லியன் பொலோவெர்களைக் கடந்த முதலாவது நபராக அமெரிக்கப் பொப் பாடகி லேடி ககா மாறினார். இச்சாதனையை அவர் கடந்த சனிக்கிழமை அடைந்தார்.
"த ஃபேம்" என்ற தனது முதலாவது இசை அல்பத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற லேடி ககா, ட்விற்றர் இணையத்தளத்தில் தனது இரசிகர்களுடன் தினமும் உரையாடி வருவதுடன், தான் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், செய்திகள் என்பவற்றைப் பகிர்வதுடன், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
உலகின் பிரபலங்கள் உட்பட சாதாரணர்களும் தங்களுடைய கருத்துக்களையும், தகவல்களையும் வெளிப்படுத்த பயன்படுத்தும் ட்விற்றர் இணையத்தளத்தில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் முதல் 5 ட்விற்றர் கணக்குகளும் இசைக்கலைஞர்களுடையவை ஆகும்.
முதலிடத்தில் லேடி ககா 20 மில்லியன் பின்தொடர்பவர்களையும், இரண்டாமிடத்தில் ஜஸ்டின் பீபர் 18 மில்லியன் பின்தொடர்பவர்களையும், கற்றி பெர்றி 15.7 மில்லியன் பின்தொடர்பவர்களையும், ஷகீரா 14.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், றிஹானா 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களையும் கொண்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீஃபனி ஜோனா அன்ஜலினா ஜேர்மனோட்டோ என்ற இயற்பெயரைக் கொண்ட 25 வயதான லேடி ககா, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கைச் சேர்ந்தவர் என்பதுடன், இதுவரை லேடி ககாவின் கிட்டத்தட்ட 23 மில்லியன் இசை அல்பங்களும், 64 மில்லியன் தனிப் பாடல்களும் இசை ரசிகர்களால் இதுவரை வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
9 hours ago
07 Jul 2025