2025 மே 02, வெள்ளிக்கிழமை

கோடீஸ்வரர் டோனியின் 645 ரூபா செக், பணமில்லாமல் திரும்பி வந்தது

Super User   / 2011 ஜூன் 25 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திரசிங் டோனி, மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பௌன்ஸர் பந்துவீச்சுகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த சிந்தனையில் இருக்கலாம். ஆனால் அவரின் தாயகத்தில் அவர் கொடுத்த காசோலையொன்று பௌன்ஸ் ஆகி திரும்பி வந்திருக்கிறது.

இந்தியாவில் போட்டிகள்  மூலமும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலமும் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவர் டோனி.

ஆனால் வெறும் 645 இந்திய ரூபாவுக்கு அவர் கொடுத்த காசோலை அவரின் வங்கிக் கணக்கில் பணமில்லாததால் திரும்பி திரும்பிவந்துள்ளது
.
ரஞ்சி நகரிலுள்ள தனது  வீட்டுக்கான வருடாந்த வரியாக ரஞ்சி மாநகர சபைக்கு டோனி இந்த  காசோiயை கொடுத்துள்ளார். 'ஸ்டேட் பேங்க் ஒவ் இண்டியா' வங்கியின் டோரண்டா கிளையிலுள்ள டோனியின் கணக்கிற்குரிய காசோலை அது. டோனியே காசோலையில் கையொப்பமிட்டுள்ளார்.

டோனி கொடுத்த காசோலை திரும்பி வந்ததால் அவர்மீது வழக்குத் தொடர செய்யமுடியும். ஆனால் இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்காது என்று கருதப்படுவதால் வழக்குப் பதிவு செய்ய ரஞ்சி மாநகர சபை நிர்வாகம் தயங்குகிறது.

அண்மையில் தனது வருமான வரியாக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை டோனி செலுத்தினார். அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தும் நபர்களில் ஒருவராக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • xsn Thursday, 30 June 2011 02:10 PM

    ஆஹா என்ன கொடுமை சரவணன் சார் இது!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X