2024 ஜூன் 17, திங்கட்கிழமை

15 நிமிடப் பயிற்சியில் களைப்படைந்தேன்: யுவ்ராஜ்

A.P.Mathan   / 2012 ஜூன் 27 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய்க்கான சிகிச்சைகளின் பின்னர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ள இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங், 15 நிமிட பயிற்சிகளின் பின்னர் தான் மிகுந்த களைப்படைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அரிதான வகை புற்றுநோய் ஒன்றிற்காக ஐக்கிய அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற யுவ்ராஜ் சிங், அதன் பின்னர் சிகிச்சையால் பாதிப்படைந்த உடலை மீளச் சரியான நிலைக்குக் கொண்டுவருவதில் ஈடுபட்டிருந்தார். தற்போது உடல்நிலை ஓரளவு வழக்கத்தை அடைந்துள்ளதால் அவர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அக்கடமியில் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் யுவ்ராஜ் சிங், வலைப் பயிற்சிகளில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், வலைப்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகப்பெரிய விடயம் எனவும், பயிற்சிகளில் ஈடுபடுவது குறித்து மிகச்சிறப்பாக உணர்வதாகவும் தெரிவித்தார்.

எனினும் 15 நிமிடங்களில் தான் மிகுந்த களைப்படைதலை உணர்ந்ததாகத் தெரிவித்த அவர், எனினும் அந்தப் பயிற்சி மோசமானதாகவும் அமைந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களில் தான் பயிற்சியில் ஈடுபட்ட முதற்தடவை அது எனத் தெரிவித்த அவர், தொடர்ந்து வரும் நாட்களில் நிலைமை இன்னமும் முன்னேற்றமடையும் என எண்ணுவதாகவும் தெரிவித்தார்.

கடந்தாண்டு இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணியாக அமைந்த யுவ்ராஜ் சிங், இவ்வாண்டு இலங்கையின் இடம்பெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்கேற்பதைத் தனது இலக்காகக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X