2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இத்தாலிய பிரதமரின் முகத்தில் சத்திரசிகிச்சை

Super User   / 2011 மார்ச் 07 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலியல் புகார்களால் சர்ச்சைக்குள்ளான இத்தாலிய பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கொனிக்கு முகத்தில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம்ஆண்டு டிசெம்பரில் கூட்டமொன்றில் பங்குபற்றியபோது திடீரென அவரை ஒரு நபர் தாக்கியிருந்தார். இதனால்  பேர்லுஸ்கொனியின் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அவரின் முகத்தில் எலும்புமாற்று சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக பேர்லுஸ்கோனியின் பிரத்தியேக மருத்துவர் அல்பேர்ட்டோ ஸாங்கிரில்லோ இன்று திங்கட்கிழமை  தெரிவித்தார்.

இச்சத்திர சிகிச்சை 4 மணித்தியாலங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதான பிரதமர் பேர்லுஸ்கோனி தற்போது மிலான் நகருக்கு வெளியிலுள்ள அவரின் வீடொன்றில் ஓய்வு பெற்றுவருவதாகவும் எதிர்வரும் வியாழனன்று கடமைக்குத் திரும்புவார் எனவும் மேற்படி மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இச் சத்திரசிகிச்சை காரணமாக, நாளை செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் இத்தாலிய விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

  • xlntgson Wednesday, 09 March 2011 08:56 PM

    இவருக்கு முகம் இருக்கிறதா, எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகின்றாரோ தெரியாது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .