Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 டிசெம்பர் 28 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸில் கால்பந்தாட்ட நட்சத்திரமான அட்ரியானோ லூயிஸ் ரிபெய்ரோ, தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு பெண்ணொருவரை காயப்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனீரோ நகரிலுள்ள இரவு விடுதியொன்றிலிருந்து அட்ரியானோ இளம் பெண்கள் சிலருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது அக்காரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நத்தாருக்கு முதல்நாள் அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் 20 வயதான அட்ரியென் சிறில்லோ பின்டோ எனும் பெண்ணின் இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் இதற்காக சத்திரசிகிச்சை செய்ய வேண்டியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
29 வயதான அட்ரியானோ ரிபெய்ரோ, காருக்குள் தனது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேடிக்கையாக தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியதாகவும் அப்போது தவறுதலாக அத்துப்பாக்கி வெடித்ததாகவும் பொலிஸாரிடம் பின்டோ தெரிவித்துள்ளார்.
அட்ரியானோ துப்பாக்கி மகசினை கழற்றிவிட்டு அதை அப்பெண்ணுக்கு காட்டியதாகவும் ஆனால் துப்பாக்கி பரலுக்குள் தோட்டா இருப்பதை அவர் அறியவில்லை எனவும் பொலிஸ் சார்ஜன்ட் அமில்டன் டயஸ் கூறியுள்ளார்.
அவர் அம்பியூலன்ஸ் ஒன்றை அழைத்து பின்டோவை வைத்தியசாலைக்கு அனுப்பினார். எனினும் அவர் பொலிஸாரிடம் தானாக சரணடையவில்லை.
இதேவேளை அக்காரில் இருந்த 28 வயதான ஏனைய இரு பெண்கள் பின்டோவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர். பின்டோ பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என அவர்கள் கூறியுள்ளனர்.
தான் காரின் முன் ஆசனத்தில் இருந்ததாகவும் துப்பாக்கியை தொடவே இல்லை எனவும் அன்ட்ரியானோ கூறியுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கியை யார் பிடித்திருந்தார்கள் என்பதை கண்டறிவதற்காக கை ரேகைகளை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்பெறுபேறு 8 நாட்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் பிரேஸில் அணிக்காக விளையாடும் அட்ரியானோ, 47 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
இத்தாலியின் இன்டர் மிலான் உட்பட பல கழகங்களுக்காகவும் விளையாடிய அவர், அண்மைக்காலத்தில் அதிக எடை, மதுபாவனை, மன அழுத்தம் முதலானவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவரின் கால்பந்தாட்ட வாழ்க்கையும் சரிவுகளை சந்தித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு அவர் தனது தாயாரின் பெயரில் மோட்டார் சைக்கிளொன்றை வாங்கி கடத்தல்காரர்களுக்கு விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
கடந்த வருடம் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு ஒரு தொகைப் பணம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் பொலிஸார் அவர்மீது நடவடிக்கையை தொடர்வதை கைவிட்டனர்.
இக்குற்றச்சாட்டை நிராகரித்த அட்ரியானோ மேற்படி பணம் ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள், மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்பட்டதாக கூறியிருந்தார்.
15 minute ago
26 minute ago
49 minute ago
56 minute ago
razzaktmm Thursday, 26 January 2012 08:32 PM
அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டாம் அது உலகில் நடக்கும் சாதாரண விடயம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
49 minute ago
56 minute ago