Kogilavani / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலகப் புகழ் பெற்ற டார்ஸன் திரைப்படங்களில் நடித்த சிம்பன்ஸியான 'சீட்டா' தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் விலங்குகள் சரணாலயத்தில் வசித்து வந்த இச்சிம்பன்ஸி, சிறுநீரகக் கோளாறினால் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளதுள்ளதாக விலங்குகள் சரணாலயத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
'இச்சமூகம் தனது குடும்ப உறுப்பினரையும் நண்பரையும் டிசெம்பர் 24 ஆம் திகதி இழந்தமை மிகக் கவலைக்குரியது' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1930களில் வெளியான டார்ஸன் திரைப்படத்தில் அமெரிக்காவின் சிறந்த நீச்சல் வீரரும் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தவருமான ஜொனி வீஸ்முல்லருடன் இணைந்து சீட்டா சிம்பன்ஸி நடித்துள்ளது.
சரணாலயத்தின் பணிப்பாளர் டெபி கோப் கருத்துத் தெரிவிக்கையில் 'அண்மையில் சீட்டா எம்மைவிட்டு பிரிந்தது. சீட்டா பெயின்டிங் மற்றும் அமெரிக்க கால்பந்து ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தது. மக்கள் சிரிப்பதை பார்ப்பதற்கு சீட்டா மிகுந்த விருப்பத்துடன் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக காட்டில் வசிக்கும் சிம்பன்ஸிகள் 40-45 வயதுவரை வாழும். மனிதர்களால் பிடித்து வளர்க்கப்படும் சிம்பன்ஸிகள் 55 வயதுவரை வாழும். ஆனால் சீட்டா 80 வயதுவரை வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago