Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய திரையுலகம் கண்ட மட்டற்ற நடிகைகளில் ஒருவரான எஸ்.என்.லட்சுமி காலமானார்.
கதாநாயகிகளால் சாதிக்க முடியாததை சாதாரண வேடங்களில் வந்து போகும் பலர் தங்களது அபார நடிப்பால் சாதித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முன்னணியில் இருப்பவர் லட்சுமி. தமிழ்த் திரைப்படங்களில் இவருக்கென தனியிடம் உண்டு. சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகைகளில் இவருக்கும் தனி இடம் உண்டு. 85 வயதிலும் தனது நடிப்பை விடாமல் தொடர்ந்து வந்தவர் லட்சுமி.
அண்மைக் காலமாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த எஸ்.என்.லட்சுமி, ஒரு படப்பிடிப்பின்போது வழுக்கி விழுந்து முள்ளந்தண்டில் அடிபட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்போடு வாழ்ந்து வந்தவர் லட்சுமி, சாலிகிராமத்திலுள்ள வீட்டில் அண்ணன் பேத்திகளோடு வசித்து வந்தார். லட்சுமியின் உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரான சென்னல்குடியில் நடைபெறவுள்ளன.
13 minute ago
36 minute ago
43 minute ago
3 hours ago
yamini Friday, 24 February 2012 01:56 AM
நல்லதொரு நடிப்பு போய்விட்டது ...................
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Sunday, 04 March 2012 09:08 AM
அப்படியன்றால் இனி தென்றலில் இல்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
43 minute ago
3 hours ago