Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 பெப்ரவரி 21 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.கே.நந்தசேன)
பிரபல சிங்கள திரைப்பட நடிகையான சனோஜா பிபிலே, கதிர்காமத்திலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அங்கு வாளுடன் காணப்பட்ட நபர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டதாக பொலிஸ் மா அதிபரிடமும் சுகாதார அமைச்சரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
நடிகை சனோஜா தனக்கு ஏற்பட்ட மேற்படி அனுபவம் தொடர்பாக கூறியுள்ளதாவது:
'எனது பெற்றோரும் குடும்பத்திலுள்ள ஏனையோரும் கதிர்காம யாத்திரிகர் விடுதியில் தங்கியிருந்தனர். பூஜைக்காக தேவாலயத்துக்கு செல்ல ஆயத்தமானபோது நான் சுகயீனமடைந்தேன். அதனால் நானும் எனது சகோதரியும் அங்கிளும் கதிர்காமம் வைத்தியாலைக்குச் சென்றோம். அப்போது மாலை 6.30 மணியிருக்கும்.
வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் முன்னால் எமது வாகனத்தை நிறுத்திவிட்டு மாவட்ட மருத்துவ அதிகாரியின் அறைக்குச் சென்றோம். அவர் என்னை சோதித்துவிட்டு மருந்துகளை எழுதிக்கொடுத்தார்.
எனினும் மருந்துகொடுக்கும் நிலையம் மூடப்பட்டிருந்தது. நாம் கதவை தட்டியபோது, குழந்தையொன்றை தூக்கிக்கொண்டு கதவை திறந்த நபர் எம்மை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் மருந்துச்சிட்டையையும் கிழித்தெறிந்தார்.
பின்னர் அவர் வாளொன்றை தூக்கிக்கொண்டு எம்மை துரத்தினார். எனினும் நாம் மருத்துவ அதிகாரியின் அறைக்குள் ஓடினோம்.
5 minute ago
16 minute ago
39 minute ago
46 minute ago
ஜெமீல் ஓட்டமாவடி Wednesday, 22 February 2012 02:10 AM
நமது தாய்த் திருநாட்டில் பல வைத்தியசாலைகளிலும் நடக்கும் , நோயாளிகளை கேவலமாகவும் துச்சமாகவும் மதிக்கும் அராஜகத்தின் ஒரு வெளிப்பாடே இங்கு செய்தியாக வெளிவந்துள்ளது. பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நானும் இரண்டு வயது எனது மகளுக்கு காய்ச்சலுக்காக பெண் வைத்தியரிடம் காட்டி சிட்டை பெற்றுக்கொண்டு மருந்தெடுக்க நின்றபோது அங்கு கடமையில் இருந்த மருந்து கொடுப்பவர் மிகவும் மோசமாக நோயாளர்ளிடம் நடந்துகொண்டார்.
Reply : 0 0
siriththiran Wednesday, 22 February 2012 11:38 AM
மேக்கப் இல்லாமல் போயிருப்பிங்க, அவர் பயந்து போயிருப்பார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
39 minute ago
46 minute ago