Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 18 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
புற்றுநோய்க்காக ஐக்கிய அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் - சிகிச்சை நிறைவுபெற்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 3 வட்டங்களாக இடம்பெற்ற கீமோதெரபி சிகிச்சை நிறைவுபெற்றதன் காரணமாகவே யுவ்ராஜ் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்டனில் சிகிச்சை பெற்றுவந்த யுவ்ராஜ் சிங், சிகிச்சையின் பின்னரான மறுசீரமைப்பில் ஈடுபட வேண்டியுள்ளது.
"3ஆவது கீமோ வட்டம் நிறைவடைந்தது. வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன். இப்போது சுதந்திரமடைந்துவிட்டேன். மீளப்பெறுகை ஆரம்பிக்கிறது. இந்தியாவுக்குத் திரும்புவதற்குக் காத்திருக்க முடியாது" என யுவ்ராஜ் சிங் தனது ட்விற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் "உங்கள் அனைவருடைய அன்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் என் ஆழ் இதயத்திலிருந்து நன்றிகள். வைத்தியர்களின் சிகிச்சைகளோடு இணைந்து அவ்வாழ்த்துக்களும், அன்பும் என்னைக் குணப்படுத்த உதவின என நம்புகிறேன்" என யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கீமோதெரபி நிறைவுபெற்றுள்ள நிலையில் தன்னை வளப்படுத்தும் பயிற்சிகளில் யுவ்ராஜ் சிங் ஈடுபட வேண்டியுள்ளது. சிகிச்சைகளின் போது இழந்த சக்திகளையும், பலத்தையும் மீளப்பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் காணப்படுகிறது.
பொஸ்டனில் சிகிச்சை பெற்றுவந்த யுவ்ராஜ் சிங், மே மாதத்தின் முதல்வாரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபடலாம் என அவருக்குச் சிகிச்சை அளித்துவந்த வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)
Mohammed Hafeez Thursday, 22 March 2012 04:34 AM
get well soon yuvi, v r waiting to see 6/6 once again.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
26 minute ago
36 minute ago