2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

லலித் மோடிக்கு எதிரான புதிய வழக்கு ஒத்திவைப்பு

A.P.Mathan   / 2012 மார்ச் 21 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான லலித் மோடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றிற்கு லலித் மோடி வழங்க வேண்டிய 65,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களை வழங்க அவர் தொடர்ந்தும் தாமதித்து வரும் நிலையில் வேறு வழிகளின்றி அவர் திவாலாகியுள்ளதாக நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கும் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடுத்து அவருக்குப் பாதுகாப்பு வழங்கியதாகவும், அதற்குரிய பணத்தினைச் செலுத்த லலித் மோடி தவறியுள்ளதாகவும் தெரிவித்த அந்நிறுவனம், அவரைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள லலித் மோடி, தனது பெயரை வைத்து குறித்த நிறுவனம் பெயர் சம்பாதிக்க முற்படுகின்றது எனவும், 65,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களை அந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருப்பதை அந்நிறுவனம் தனக்குத் தெரிவித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். (க்ரிஷ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .