Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 மார்ச் 23 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபலமானவர்கள் அவதூறுகளுக்கு இலகுவான இலக்காக உள்ளனர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து, அவரின் மனைவி, மஞ்சுளா திலினி கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.
'டில்ஷானுக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டு வருவது இதுதான் முதல் தடவையல்ல. இவ்வாறான அவதூறுகளுக்கு பிரபலமானவர்கள் இலகுவான இலக்காக உள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. ஒரு சமயம் நானும் இவ்வாறான அவதூறுக்கு முகம் கொடுத்தேன். இது சாதாரணமான விடயமே. நான் மறுப்பு விடுமளவுக்கு இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை' என மஞ்சுளா திலினி தெரிவித்துள்ளார்.
இதேவேளை டில்ஷானுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையென ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் உபாலி தர்மாஸ கூறியுள்ளார்.
'நாம் அவை பிழையானவையென நிரூபித்துள்ளோம். இது வெறும் அவதூறு மட்டுமே. இதற்கு முன்பே நாம் விளக்கமளித்து விட்டோம். இருப்பினும் ஒரு சிலரின் தூண்டுதல் காரணமாக இந்த பிரச்சினை மீண்டும் கிளப்பப்பட்டுள்ளது' இவ்வாறு பழிசுமத்துபவர்கள் பற்றிக் கேட்டபோது அவர் தனக்கு தெரியாது என்றும் இவ்வாறான விடயங்கள் நடந்திருக்கக் கூடாது எனவும் இது கெடுதியான விளம்பரம் ஆகும் எனவும் கூறினார். (தினேஷ் மந்திரிவிதான)
8 minute ago
19 minute ago
42 minute ago
49 minute ago
ashraff Saturday, 24 March 2012 02:53 PM
நம்ப நட ,நம்பி நடவாதே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
42 minute ago
49 minute ago