2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிரட் ஹடினின் மகளுக்கு புற்றுநோய்

Menaka Mookandi   / 2012 மே 05 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கான அவுஸ்ரேலிய சுற்றுலாவின் ஆரம்பத்திலேயே அவர் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து அவுஸ்ரேலியாவுக்குத் திரும்பியிருந்தார்.

அவர் அவுஸ்ரேலியாவுக்குத் திரும்புவதற்கான காரணம் அப்போது அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

பிரட் ஹடின் அவுஸ்ரேலியாவுக்குத் திரும்புவதற்கான காரணமாக தெளிவாக எந்தக் காரணங்களும் முன்னர் குறிப்பிட்டிருக்கப்பட்டிருக்கவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவுஸ்ரேலியாவுக்குத் திரும்புவதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதே உண்மையான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

17 மாதங்கள் வயதான அவரது மகளே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது மகளை பிரட் ஹடின் தொடர்ந்தும் அவருடன் இணைந்திருந்து பராமரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரட் ஹடின் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டவுடனேயே இந்த எதிர்பாராத அறிவிப்பு பிரட் ஹடினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரட் ஹடின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலாவிற்காகப் புறப்படும் போது அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாகக் காணப்பட்ட நிலையில், அவர் அத்தொடரின் நடுவே சிலவேளைகளில் அவுஸ்ரேலியாவுக்குத் திரும்ப வேண்டி ஏற்படலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அவரது மகளின் புற்றுநோய் காரணமாக அவர் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டது.

34 வயதான பிரட் ஹடின், தற்போது வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள அவரது மகளைப் பராமரித்து வருவதுடன், தனது மனைவியையும், தனது புதிய குழந்தையையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .