2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நீதிமன்றத்தில் ஆஜராக ஷாருக்கானுக்கு உத்தரவு

A.P.Mathan   / 2012 மே 22 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தானில் இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியொன்றில் மைதானத்தில் வைத்து புகைப்பிடித்தார் என்ற குற்றச்சாட்டிற்காக ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இந்தியாவின் பிரபல நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு ராஜஸ்தான் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஷாருக்கானுக்கு எதிராகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குமிடையில் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி ஜெய்ப்பூரில் இடம்பெற்ற போட்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்காகவே அவருக்கு இந்த அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது. அப்போட்டியில் ஷாருக்கான் புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை போட்டியை ஒளிபரப்புச் செய்த கமெராக்கள் படம்பிடித்திருந்தன. அதனைக் கண்ட பொதுமகன் ஒருவரே ஷாருக்கானுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ஆனந்த் சிங் ரதோர் என்ற நபரே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். நாட்டில் பொது இடத்தில் புகைப்பிடிக்கக் காணப்படும் தடையையும் மீறி ஷாருக்கான் புகைப்பிடித்தமை தவறானது எனத் தெரிவித்துள்ள அவர், ஷாருக்கான் மிகப்பிரபலமான நடிகர் என்பதால் அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகமாகக் காணப்படுகிறார்கள் எனவும், இவ்வாறு இவர் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோரின் முன்னால் புகைப்பிடிக்கும் போது அவரது இளம் ரசிகர்கள் அவரைப் பின்பற்ற விளைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அவரது ரசிகர்கள் அவரது ரசிகராக மாத்திரமன்றி அவரை முன்மாதிரியாகக் கொண்டு அவரைப் பின்பற்றும் நிலையில் ஷாருக்கானின் நடவடிக்கை தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் கடந்த வாரம் மும்பையின் வன்கெடே மைதானத்தில் மதுபோதையில் அங்கிருந்த அதிகாரிகள், காவலர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை எனத் தெரிவித்த வன்கெடே மைதானத்திற்குள் நுழைவதற்கு ஷாருக்கானுக்கு 5 வருடகாலத் தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்தத் தடையை மும்பைக் கிரிக்கெட் அமைப்பு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .