2024 ஜூன் 17, திங்கட்கிழமை

சச்சின் எம்.பியாக பதவிப்பிரமாணம்

Super User   / 2012 ஜூன் 04 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

39 வயதான சச்சின் டெண்டுல்கரை இந்திய நாடாளமன்றத்தின் ராஜ்யசபா உறுப்பினர்களில் ஒருவராக கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நியமித்தார்.

போட்டிகளில் பங்குபற்றும் காலத்திலேயே ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.

"ராஜ்ய சபா உறுப்பினர்பதவிககாக எவரையும் நாடிச் செல்லவில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கை காரணமாகவே நான் இங்கு வந்துள்ளேன்.  கிரிக்கெட் விளையாடுவதை நான் கைவிடப்போவதில்லை. விளையாட்டு தொடர்பான விவகாரங்களை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்" என பதவிப்பிரமாணத்தின் பின்னர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

"எனது சக எம்.பிகளின் உதவி எனக்குத் தேவை. கிரிக்கெட்டிற்கு மாத்திரமல்லாமல் அனைத்து விiயாட்டுகளின் அபிவிருத்திக்கும் சில விடயங்களை செய்த நாடாளுமன்ற உறுப்பினராக நினைவுகூரப்படுவதை நான் விரும்புகிறேன்.

இந்திய ஜனாதிபதியினால்  ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்ட்டமை பெரும் கௌரவமாகும். நான் தொடர்ச்சியாக விளையாடுவேன். எப்போது ஓய்வு பெறுவேன் எனத் தெரியாது" என அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X