2024 ஜூன் 17, திங்கட்கிழமை

ராஜ்யசபையில் விளையாட்டோடு மாத்திரம் சச்சின் இருக்கக்கூடாது: கவாஸ்கர்

A.P.Mathan   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்யசபை உறுப்பினராகப் பதவியேற்றுள்ள இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னை விளையாட்டுத்துறையுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரமும், நேர்முக வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், நேற்றைய தினம் பதியேற்றுக் கொண்டார். சச்சினின் பதவியேற்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சுனில் கவாஸ்கர், சச்சின் சாதாரண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தனது எண்ணத்தின் அடிப்படையில் சச்சின் டென்டுல்கர் தன்னை விளையாட்டுக்களின் அபிவிருத்தியோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளக்கூடாது எனத் தெரிவித்த சுனில் கவாஸ்கர், அடிப்படையான மக்களுக்கு உதவியை வழங்குவதற்கான அற்புதமான வாய்ப்பு சச்சினுக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். அதனை சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சச்சினின் பதவியேற்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த உலக செஸ் சம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபை உறுப்பினராகப் பதவியேற்றமை சச்சினுக்கு மிகப்பெரிய படி எனத் தெரிவித்ததோடு, அவர் மாநிலங்களவையிலும் சிறப்பாகச் செயற்படுவார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகத் தெரிவித்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X