2024 ஜூன் 17, திங்கட்கிழமை

உள்ளாடை வர்த்தகத்தில் கரோலின் வொஸ்னியாக்கி

Super User   / 2012 ஜூன் 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் முன்னிலை டென்னிஸ் வீரர்களில் ஒருவரான கரோலின் வொஸ்னியாக்கி, உள்ளாடை வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளார்.

இதற்கான டென்மார்க்கிலுள்ள ஆடை நிறுவனமொன்றுடன் தான் பங்குதாரராகியுள்ளதாக கரோலின் வொஸ்னியாக்கி நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

'திஸ் இஸ் மி' எனும் பெயரிலான இந்த ஆடைகள், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உலகெங்கும் விற்பனைக்கு வரவுள்ளது.
கரோலின் வொஸ்னியாக்கியின் பிரத்தியேக ஸ்டைல் மற்றும் சௌகரிய விருப்பங்களுக்கு ஏற்ப இந்த உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம்.

டேன்மார்க்கைச் சேர்ந்த 21 வயதான, கரோலின் வொஸ்னியாக்கி உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையாக விளங்கியவர். தற்போது அவர் 9 ஆவது நிலையில் உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X