2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவு; ஆசிரமத்துக்கு சீல் வைத்தது கர்நாடக அரசு

Menaka Mookandi   / 2012 ஜூன் 11 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் அமைந்துள்ள பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவரான நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் அமைத்துள்ளார். இவரது செயற்பாடுகள் பற்றியும் ஆசிரம நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

அண்மையில் மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு உருவானது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இந்நிலையில், கர்நாடகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் ஆர்த்திராவ், நித்தியானந்தா மீது பாலியல குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்தப் புகாருக்கு விளக்கம் கொடுப்பதற்காக நித்தியானந்தா சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் மாநாடொன்றை நடத்தினார். அதன்போது செய்தியாளர்களுக்கும் நித்தியானந்தா மற்றும் செய்தியாளர்களுடன் கை கலப்பில் நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நித்தியானந்தாவை பிடதியில் இருந்து வெளியேற்றக் கோரி கன்னட அமைப்பினர் போராட்டமும் நடத்தினர்.

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி அசம்பாவிதங்களை உருவாக்கி வரும் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தும் என்றும் கர்நாடக அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பிடதி ஆசிரமத்தைச் சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கைகளின் படி பிடதி ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை கைது செய்யவும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நித்தியானந்தா ஆசிரம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரமத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவரது பிணையை ரத்து செய்யவும் கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

  Comments - 0

  • IBNUABOO Monday, 11 June 2012 02:26 PM

    இவர்களது தெய்வீக வழிகாட்டல் பயன் தருமா? முற்றும் துறக்காமல் முனிவர் வேசம் போட்டால் ஆசைகளுக்கு அடிமைதான் ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .