2024 ஜூன் 17, திங்கட்கிழமை

ஹொலிவூட் நடிகை ஷாங் ஷியி மீது பாலியல் குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2012 ஜூன் 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் இடம்பெற்றிருந்த முக்கிய உறுப்பினர் ஒருவரிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு பாலியல் உறவு கொண்டதாக ஹொலிவூட் நடிகை ஷாங் ஷியி மீது பரபரப்பு குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து மேற்படி கம்யூனிஸ்ட் தலைவர் பொலிட்பீரோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
சீனாவைச் சேர்ந்தவர் ஷாங் ஷியி. இவர் ஏராளமான சீனத் திரைப்படங்களிலும், ஆங்கிலத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 'கிரவுச்சிங் டைகர்' மற்றும் 'ஹிடன் டிராகன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர்.

இவரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் உறுப்பினராக இருந்தவருமான போ ஸிலாய் என்பவரும் பாலியல் உறவு கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பாலியல் உறவுக்காக குறித்த நடிகைக்கு போ ஸிலாய், கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவிலும், ஹொங்கொங்கிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு  வெடித்ததை அடுத்து போ ஸிலாய், பொலிட்பீரோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், இந்த செக்ஸ் குற்றச்சாட்டினை நடிகை ஷாங் ஷியி மறுத்துள்ளார். தற்போது தெற்கு சீனாவில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றுள்ள ஷாங் ஷியி, இது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'இது கற்பனையான ஒரு செய்தி. இதில் சற்றும் உண்மை இல்லை' என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சீன மொழி இணையதளமான பாக்ஸன் தான் முதன் முதலில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 32 வயதாகும் ஷாங் ஷியி, 2007 முதல் 2011 வரை சுமார் பத்து முறை போ ஸிலாயுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சீன அரசு விசாரணை நடத்தி வருகின்றது. போ ஸிலாய், பல பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ளவர் என்றும் பரபரப்பாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X