2024 ஜூன் 17, திங்கட்கிழமை

ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான போட்டிகளில் தங்கம் வென்ற பிங்கி ஓர் ஆண் ; வல்லுறவு குற்றச்சாட்

Super User   / 2012 ஜூன் 14 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4x 400மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியரான பிங்கி பிரமாணிக் உண்மையில் ஓர் ஆண் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான பிரமாணிக் 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் போட்டிகளில் புகழ்பெற்ற இந்திய 'வீராங்ககனையாக' விளங்கினார். 2006 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான  4x 400மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற  இந்திய அணியில் இடம்பெற்றார்.

அதற்குமுன் 2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் அவர் 3 தங்கப்பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது. அதேவருடம் பொதுநலவாய விளையாட்டு விழாவிலும் அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

3 வருடங்களுக்கு முன்னர் அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பகுய்ஹட்டி நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து இன்று வியாழக்கிழமை பிங்கி பிரமாணிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விளையாட்டு நட்சத்திரம் ஓர் ஆண் எனவும் தன்னுடன் பல மாதங்களாக ஒன்றாக வாழ்ந்ததாகவும் தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் பெண்ணொருவர் முறைப்பாடு செய்தார் என பகுய்ஹட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாட்டையடுத்து மருத்துவ சோதனைக்காக மருத்துவமனையொன்றுக்கு பிரமாணிக் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உண்மையில் ஆண் என்பது நிரூபணமானது.

'பிரமாணிக்கை நாம் அரசாங்க வைத்தியசாலையொன்றுக்கு சோதனைக்காக அழைத்துச் செல்வோம். மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன்  அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்' என மேற்படி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • BuAli Thursday, 14 June 2012 07:12 PM

    " சோதனையின் போது உண்மையில் பெண் என்பது நிரூபணமானது" .......ஆண் என்கிறீர்கள். பெண் என்கிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்?.

    Reply : 0       0

    hkama Friday, 15 June 2012 05:13 AM

    முன்னுக்கு பின் முரணாக தக‌வல் த‌ரப்பட்டுள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X