2024 ஜூன் 17, திங்கட்கிழமை

தற்போதைய இலங்கை அணியில் நடனமாடுபவர்கள் இல்லை : சனத்

Super User   / 2012 ஜூன் 15 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியில் சிறப்பாக நடனமாடக் கூடியவர்கள் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய கூறியுள்ளார்.  இந்திய தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியொன்றில் தான் பங்குபற்றுவது குறித்து இலங்கையில் தனது சமகாலத்தவர்கள் மத்தியில் வித்தியாசமான பிரதிபலிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனது சமகாலத்தவர்கள் வியப்படைந்துள்ளனர். ஏனெனில் நான் வித்தியசாமான வகையான நபர். இந்த மாதிரியான விடயங்களுக்கு நான் சம்மதித்தவுடன் அவர்கள் சற்று வியப்படைந்துள்ளனர்.  அவர்கள் பல்வகையான உணர்வுகளை கொண்டுள்ளனர். எனவே சில கருத்துகள் நல்லவையாக உள்ளன. வேறு சில கருத்துகள் நல்லவையல்ல. எனவே நான் சற்று கவலையடைந்தேன்" என அவர் கூறினார். இத்தகைய பிரதிபலிப்புகளால் தனது ஊக்கம் குறையவடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

'நான் அச்சமடையவில்லை. நான் சிறந்த நடனக்கலைஞர் அல்ல. அதற்கு சில காலம் எடுக்கும். எனக்கு சௌகரியமில்லாத ஒரு வலயத்திற்குள் நான் புகுவதாக உணர்கிறேன். ஆனால் ஒரு மனிதன் என்ற வகையில் புதிய விடயங்களை முயற்சிக்க வேண்டும் என விரும்புகிறேன். இது எனது எதிர்கால தொழிற்சார் வாழ்க்கையை பாதிக்காது என்ற அளவில் இப்புதிய விடயங்களில் நான் சௌகரியமாக உணர்கிறேன்' எனஅவர் கூறியுள்ளார்.

"முதலில் எந்த வகையான நடனம் எனக்குத் தேவைய என நான் பார்க்கவேண்டும். ஏனெனில் எமது நாட்டில் சில வகை முறைமைகள் உள்ளன. நாம் அதிக பழைமைவாதமான மக்கள். என்னை ஒரு கிரிக்கெட் வீரராகவே மக்கள்  நோக்குகின்றனர். இப்போது இத்தகைய விடயங்களில் (நடனம்) நான் ஈடுபடும்போது அவரக்ள் வித்தியாசமாக என்னை பார்க்கின்றனர். எனவே நான் மிக அவதானமாக இருக்க வேண்டும்" அவர் தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சியொன்றின் ஜலக் டிக்லா ஜா எனும் பெயரிலான நடன நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சனத் ஜயசூரிய பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • pottuvilan Saturday, 16 June 2012 08:06 AM

    ஆடுங்க ஆடுங்க உங்களுக்கு வாக்களித்தவர்கள் பார்க்கட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X