2024 ஜூன் 17, திங்கட்கிழமை

பாகிஸ்தானின் பிரபல பாடகியும் தந்தையும் படுகொலை

Super User   / 2012 ஜூன் 19 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பிரபல பாடகியொருவரான கஸாலா ஜாவிட்டும் அவரின் தந்தையும் ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பெஷாவர் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இசைக்குடும்பமொன்றில் பிறந்த கஸாலா ஜாவிட், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் உலகெங்குமுள்ள பெஷ்டோ மொழிபேசும் மக்களிடம் பிரபலமானவர். பெஷ்டோ மொழியில், பெரும்பாலும் சமாதானம் குறித்ததாக அவரின் பாடல்கள் அமைந்திருந்தன.

24 வயதான கஸாலா, சில வருடங்களுக்கு முன் வர்த்தகர் ஒருவரை திருமணம் செய்தார். எனினும் பின்னர் இவர்கள் பிரிந்தனர்.

இக்கொலைகளுக்கு தலிபான்கள் காரணமாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட போதிலும் குடும்பத் தகராறே இதற்கு காரணம் என நம்பப்படுவதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் கஸாலாவின் முன்னாள் கணவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் அதிகாரியான இம்தியாஸ் கான் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X