2024 ஜூன் 17, திங்கட்கிழமை

நித்தியானந்தாவின் குரல், இரத்தத்தை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நித்தியானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அவரது இரத்தம் மற்றும் குரல் பரிசோதனை நடத்த கர்நாடக மாநில ராமநகரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற இருவட்டு வெளியீடு விவகார வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனைக்கு சமூகமளிக்குமாறு ஏற்கனேவ 6 முறை கர்நாடக இரகசிய பொலிஸார் சார்பில் நித்தியானந்தாவுக்கு மனு அனுப்பப்பட்டது. இருப்பினும் நித்தியானந்தா அந்த மனுக்களை நிராகரித்திருந்தார்.

இதனையடுத்து இரகசிய பொலிஸார் ராமநகரம் நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில், நித்தியானந்தா இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று நீதிமன்றத் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற இருவட்டு ஒன்றை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. இந்த இருவட்டினை லெனின் கருப்பன் என்கிற நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்தான் தயாரித்து வெளியிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இருவட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக இரகசிய பொலிஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்த போதே நீதிமன்றம் மேற்கண்டவாறான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. (தட்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X