2024 ஜூன் 17, திங்கட்கிழமை

நீச்சலுடை பெண்ணை கட்டித்தழுவிய ஆயர் ராஜினாமா

Super User   / 2012 ஜூன் 27 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்கரையில் நீச்சலுடையிலிருந்த பெண்ணை கட்டித்தழுவிய ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஆயர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

57 வயதான ஆயர் பெர்னாண்டோ பர்கலோ, மெக்ஸிகோ கடற்கரையில் நீச்சலுடையிலிருந்த பெண்ணொருவருடன் குளிக்கும் மற்றும் கட்டித்தழுவும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பானதையடுத்து சர்ச்சை ஏற்பட்டது.

அப்பெண் தனது சிறுவயது தோழி என மேற்படி ஆயர் முதலில் கூறினார். நீண்டகால நட்பின் அடிப்படையில் இப்புகைப்படங்கள் பார்க்கப்பட வேண்டும் என அவர் கூறினார். இந்த ராஜினாமாவை பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், பின்னர் தனது மறை மாவட்டத்திற்குட்பட்ட பாதிரியார்களை சந்தித்த அவர், மேற்படி பெண்ணுடன் தனக்கு காதல் தொடர்புகள் உள்ளதாக ஒப்புக்கொண்டதுடன் தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X