2024 ஜூன் 17, திங்கட்கிழமை

டொம் குரூஸ்- கெத்தி ஹோம்ஸ் விவகாரத்து

Super User   / 2012 ஜூன் 30 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொலிவூட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக விளங்கிய நடிகர் டொம் குரூஸும் (49) நடிகை கெத்தி ஹோம்ஸும் (33) விவாகரத்து செய்யவுள்ளதாக அத்தம்பதியின் சட்டத்தரணி ஜொனதன் வூல்வ் அறிவித்துள்ளார். இது ஒரு தனிப்பட்ட அந்தரங்க  விவகாரம் என அவர் கூறினார்.

இத்தம்பதி 2006 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியின் மகளான சூரிக்கு  6 வயதாகிறது.

நடிகர் டொம் குரூஸ், ஏற்கெனவே இரு தடவை திருமணம் செய்திருந்தார்.  நடிகை நிகோல் கிட்மனை திருமணம் செய்தார். நிகோல் கிட்மன் மூலம் டொம் குரூஸுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த விவகாரத்தின் காரணமாக வருடாந்தம் 30 லட்சம் டொலர்களை ஜீவனாம்சமாக கெத்தி ஹோம்ஸ் பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகிது.

டொம் குரூஸ், ஏற்கெனவே இரு தடவை திருமணம் செய்திருந்தார். 1987 ஆம் ஆண்டு நடிகை மினி ரோஜர்ஸை திருமணம் செய்த டொம் குருஸ், 1990 ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார். பின்னர் 1990 ஆம் ஆண்டு பிரபல நடிகை நிகோல் கிட்மனை திருமணம் செய்திருந்தார். இந்த ஜோடி 2001 ஆம் ஆண்டு பிரிந்தது. அதன்பின் 2006 ஆம் ஆண்டு கெத்தி ஹோம்ஸும் டொம் குரூஸும் திருமணம் செய்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X