2024 ஜூன் 17, திங்கட்கிழமை

முன்னாள் இலங்கை டெஸ்ட் நடுவர் ஆனந்தப்பா காலமானார்

A.P.Mathan   / 2012 ஜூலை 04 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் டெஸ்ட் நடுவரான இக்னாரியஸ் ஆனந்தப்பா இன்று காலமாகினார். 73 வயதான அவர், இன்று மொரட்டுவையில் காலமானார்.

முன்னாள் நடுவராகவும், தொழில்முறை நடுவர்கள் அமைப்பின் செயலாளராகவும் பதவி வகித்த இக்னாசியஸ் ஆனந்தப்பா, 3 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் நடுவராகப் பங்குபற்றினார்.

நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் சார்பாக கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய அவர், வலதுகைத் துடுப்பாட்ட வீரராகவும், வலதுகைச் சுழற்பந்து வீச்சாளராகவும் விளங்கினார். அத்தோடு அவருக்கு உள்ளூர்ப் போட்டிகளில் 45 வருடகாலத்திற்கும் மேற்பட்ட காலம் நடுவராகப் பங்குபற்றிய அனுபவம் உண்டு.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X