2024 ஜூன் 17, திங்கட்கிழமை

மார்க் பௌச்சருக்குக் கண்ணில் சத்திர சிகிச்சை

A.P.Mathan   / 2012 ஜூலை 10 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளரான மார்க் பௌச்சருக்குக் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னாபிரிக்காவின் இங்கிலாந்துச் சுற்றுலாவில் அவரது பங்குபற்றுகை கேள்விக்குரியதாகியுள்ளது.

இங்கிலாந்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியின் முதலாவது பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி சமர்செட் அணிக்கெதிராகப் பங்குபற்றி வருகிறது. நேற்றைய நாள் ஆட்டத்தில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தொன்று விக்கெட்டைத் தாக்கி விக்கெட்டின் "பெய்ல்ஸ்" மார்க் பௌச்சரின் கண்ணைத் தாக்கியுள்ளது. அவரது இடது கண்ணே பாதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஓரளவு அதிகமானது என முதற்கட்டமாக வெளிவரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு பெரியளவிலான சத்திரசிகிச்சையான அமையுமானால் தனது 150 டெஸ்ட் போட்டியில் பங்குபற்றும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்திற்குச் சென்ற மார்க் பௌச்சரின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்புக்களுள்ளன.

இந்தத் தொடரோடு மார்க் பௌச்சர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்க் பௌச்சர் முதலாவது டெஸ்ட் போட்டிக்குத் தயாராக இருப்பார் எனத் தான் எண்ணவில்லை எனத் தெரிவித்த தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மூசாஜி, இந்தத் தொடரில் அவரின் பங்குபற்றுகை குறித்துத் தன்னால் கருத்து எதனையும் முன்வைக்க முடியாது எனத் தெரிவித்தார். சத்திரசிகிச்சையின் முடிவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X