2024 ஜூன் 17, திங்கட்கிழமை

நடனப் போட்டித் தொடரிலிருந்து சனத் ஜயசூரிய வெளியேற்றம்

Super User   / 2012 ஜூலை 11 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் ஜலக் டிக்லா ஜா எனும் நடன நிகழ்ச்சியில் பங்குபற்றி வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரிய வாக்களிப்பு மூலம் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஐந்தாவது தடவையாக நடைபெறும் ஜலக் டிக்லா ஜா நிகழ்ச்சியில் சனத் ஜயசூரிய நடனமாடி வந்தார். பிரபல பொலிவூட் நடிகை மாதுரி தீக்ஷித், கரன் ஜோஹர், ரெமோ டி சௌஸா  ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் தோல்வியுற்றபின் மேடையிலிருந்து வெளியேறுவதற்கு முன் கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய, தன்னுடன் இணைந்து நடனமாடிய நடனத்தாரகைக்கு நன்றி  தெரிவித்தார்.

இந்த நடன நிகழ்ச்சிக்காக மாத்திரமல்லாமல் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஆதரவளித்தமைக்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சனத் ஜயசூரிய கூறினார்.

'அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் உதவிகரமாக இருந்த நடுவர்களுக்கு நன்றிகள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இத்தொடரில் மிகச்சிறந் நபர் வெற்றிபெறுவார் என நம்புகிறேன்' என அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0

  • jemm Thursday, 12 July 2012 12:51 PM

    முதல்ல துடுப்பாடினார் இப்போ நடனமாடினார் மொத்ததில இவங்க கூத்தாடிகள்தான்.

    Reply : 0       0

    urankudy Friday, 13 July 2012 11:23 AM

    இவரை வைத்து ஒரு ஹிந்தி படம் எடுத்தால் என்ன?
    தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X