2024 ஜூன் 17, திங்கட்கிழமை

லண்டன் செல்ல சுரேஷ் கல்மாடிக்கு அனுமதி

A.P.Mathan   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் ஊழல் இடம்பெற்றதாக ஏற்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து விசாரணைகளை எதிர்கொண்டு வரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுநலவாய ஏற்பாட்டுக் குழுத்தலைவருமான சுரேஷ் கல்மாடிக்கு லண்டன் செல்வதற்கான அனுமதியை டெல்லி நீதிமன்றமொன்று வழங்கியுள்ளது.

லண்டனில் இடம்பெறவுள்ள சர்வதேச தடகள விளையாட்டுச் சம்மேளனத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சுரேஷ் கல்மாடி விடுத்த கோரிக்கையே ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுரேஷ் கல்மாடிக்கான அழைப்பை சர்வதேச தடகள விளையாட்டுச் சம்மேளனத்தின் செயலாளர் எஸாக் கப்ரியல் விடுத்திருந்தார். ஆசிய தடகள அமைப்பின் தலைவராகவும், சர்வதேச தடகள விளையாட்டுச் சம்மேளனத்தின் உறுப்பினராகவும் சுரேஷ் கல்மாடி எதிர்ரும் ஜூலை 26ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளதாக அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவருக்கு 10 இலட்சம் பெறுமதியிலான பிணையில் லண்டன் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அத்தோடு சுரேஷ் கல்மாடி மீதான விசாரணைகள் தாமதிக்கப்படாது எனவும், அவர் விசாரணைத் தினங்களில் நீதிமன்றத்தில் கலந்து கொள்வார் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு நிகழ்வின் ஏற்பாடுகள் தாமதிக்கப்பட்டு இறுதிநேரம் வரை குழப்பம் நிலவியதோடு, அந்த ஏற்பாட்டு நிகழ்வுகளில் ஊழல்கள் இடம்பெற்றதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X