2024 ஜூன் 17, திங்கட்கிழமை

சில்வெஸ்டர் ஸ்டாலோனின் மகன் சேஜ் மர்ம மரணம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 15 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொலிவூட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சில்வெஸ்டர் ஸ்டாலோனின் மகனும் நடிகருமான சேஜ் மூன்பிளட் ஸ்டாலோன் (வயது 36) அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சேஜ், அவரது அறையில் சடலமாக கிடப்பதை வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய அங்கு விரைந்த லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருந்த சேஜ், 1990இல் ரொக்கி பல்போ ஜூனியர் என்ற பெயரில் நடித்தவராவார். 

இவரது மரணம் சில்வெஸ்டர் ஸ்டாலோனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அவர் பெரும் துயரத்தில் உள்ளார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சேஜின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே சேஜ் எப்படி மரணமடைந்தார் என்பது தெரிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X