2024 மே 26, ஞாயிற்றுக்கிழமை

தனது பாரம்பறியத்திற்கு பெண்ணியம் அவசியமற்றது: கார்லா புருனி

Kogilavani   / 2012 நவம்பர் 26 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடு ஒன்றே பெண்களுக்குரிய இடமென தான் நம்புவதாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சர்கோசியின் மனைவி கார்லா புருனி தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளைகள் மற்றும் தனது பாரம்பறியத்திற்கு பெண்ணியம் என்பது அவசியமற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர் வெளிநாட்டு சஞ்சிகையொன்றுக்கு அளித்துள்ள செவ்வியொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'இதனை மீறி செயற்படுவர்களும் உள்ளனர். நான் பெண்ணியகொள்கையில் தீவிரமானவள் இல்லை. மாறாக நான் முதலாளித்துவமிக்கவராக இருக்கின்றேன். நான் குடும்ப வாழ்வை விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு விடயத்தை செய்வதையே விரும்புகிறேன' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 'ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை சலிப்பை ஏற்படுத்துகிறது' என முன்னாள் பாடகியும் மொடலுமான 45 வயதுடைய சர்கோஷி புருனி நிக்கோலோ சர்கோசியை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்வதற்து முன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அவர், ரொக் ஸ்டார் என அழைக்கப்படும் ஜெகர், ஹெரிக் கிலிப்டன் மற்றும் புகழ்பெற்ற அரிசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நட்பு ரீதியான உறவை வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை திருமணம் செய்தபோது அவரது கணவரின் வலதுசாரி கொள்கைக்கு மாறினார்.

'ஓரின திருமணம் மற்றும் தத்தெடுப்பிற்கு ஆதரவாக இருக்கின்றேன்.  எனக்கு அதிகமான ஆண் மற்றும் பெண் நண்பர்கள் உள்ளனர். அவர்களும் மேற்படி நிலைமைகளில் உள்ளனர். அவர்களின் குடும்பங்கள் நிலையற்ற தன்மை  அல்லது விபரீத தன்மையை நான் காணவில்லை' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .